Saturday, 2 May 2009

ஈழம், இந்திய பத்திரிக்கைகள், freedom

எனக்கு தொடர்ச்சியாகவோ சுவாரஸ்யமாகவோ எழுத வராது.
அதனால், நான் வாசிப்பதில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறேன்.
கடந்த நான்கு வருடங்களாக, ஈழ பிரச்சினை பற்றி பல்வேறு ஊடகங்களின் வழியாக...பக்க சார்பு இல்லாமல் என்று சொன்னால் பொய், சற்றே பக்க சார்புடனும், அதே நேரத்தில், வெவ்வேறு ஊடகங்களின் கோணங்களிலும் படித்து வருகிறேன்.

பல பதிவர்கள் எழுதி வருவதை போல, கடந்த சில மாதங்களாக அங்கு நடந்து வரும் சண்டை, மனதளவில், எனக்குள் ஏதோ ஒரு கோபத்தையும், ஆத்திரத்தையும், இயலாமையையும் உணரவைத்தது.


reuters, AFP,bbc, போன்ற வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் தங்களால் ஆன அளவிற்கு செய்திகளை இருதரப்பிலிருந்தும் வாங்கி வெளியிடுகின்றனர். இந்திய பத்திரிக்கையாளர்களையும், இந்திய பத்திரிக்கைகளையும், சரியாக புரிந்து கொள்ள ஈழ பிரச்சினை ஒன்றே பெரும் துணையாக இருந்தது.

நாம் இந்திய பத்திரிக்கைகளை பற்றி விமர்சிக்கவே தேவை இல்லை.. குறைந்த பட்சம் ஐந்து கோடி தமிழ் மக்களை பிரதிநிதி படுத்தும் தமிழ் பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் , அவற்றுற்கென ஒரு செய்தியாளரை, கொழும்பிலும், வன்னியிலும் வைத்துள்ளார்களா?


ஆங்கில செய்தி நிறுவனங்களின் செயல்பாட்டினை பார்த்தால் நகைசுவைக்கு அளவே இல்லை, பொறுமையாக ஈழத்தில் இருக்கும் ஒரு ஊரின் பெயரை கூட சொல்ல தெரியாது....ஒரு புரிதலும், இல்லை, 7000 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஐநாவே அறிக்கை விட்டதை கூட, திருப்பி பதிப்பிக்க மாட்டார்கள். ஆனால், ராஜபக்சேவிடம், "பிரபாகரனை" பிடித்தால் இந்தியாவிடம் ஒப்படைப்பீர்களா என்று கேட்பார்கள்....:-)


இவர்களுக்கு இந்திய நலனும் கிடையாது, தமிழக நலனும் கிடையாது...ஏதோ தமிழ் நாட்டை சேர்ந்தவர்களே ஒரு வேற்று கிரக வாசிகளை போல் நடத்துகிறார்கள். எடுக்கும் நேர்காணலை கூட தெளிவாக ஒளிபரப்புவதில்லை....
இதுவரை, பதினாறு பேர் தீக்குளித்து உள்ளனர்...(இதில் அனைத்து கட்சியினரும்) உள்ளனர்....சிலர் பலநாட்கள் உண்ணாவிரதம் இருந்துள்ளனர், அனைத்து கட்சி தீர்மானங்கள், சட்டமன்ற தீர்மானங்கள், அனைத்து கட்சியினரும் அவரவர் வழியில் போராடியும் உள்ளனர். இந்த செய்திகள் எதுவுமே, இந்திய அளவில் கண்டு கொள்ளப்படவே இல்லை.
எந்த டிவியில் விவாதம் வந்தாலும், மக்களை பிரதிநிதிபடுத்தும் திமுக, அதிமுக, மதிமுக, விசி, பா ம க, போன்ற கட்சிகளின் பிரதிநிதிகளிடம் தமிழக கருத்துக்கள் கேட்க படுவதில்லை. அவர்களுக்கு தெரிந்தது எல்லாம், ஈழ பிரச்சினையில், எதிர் கருத்துடைய, ராம், சோ, சுனா-சானாவிடம் மட்டும் கேட்டு கொள்கின்றனர்.
சமீபத்தில் வந்த NDTV மட்டுமே ஏதோ கொஞ்சம் மாற்று கருத்திற்கொரு இடம் கொடுத்தார்கள்...அதிலும், மேற்சொன்னா ஆசாமிகளே ஆக்கிரமித்துகொண்டனர்...ஜெகத் காஸ்பரை பேசவே விடவில்லை.

இதில் தமிழ் எழுத்தாளர் அறிவுஜீவிகளை நினைத்தாலே அருவருப்பாக இருக்கிறது.
அவர்கள் இதைத்தான் எழுதவேண்டும் என்று நிர்பந்திக்க எனக்கோ யாருக்குமோ உரிமை இல்லை என்பதை நான் உணரவே செய்கிறேன். 


அதே வேலை, ஏதோ, அமேரிக்காவில் ஒரு ஆண் பிள்ளையை வயிற்றில் சுமக்கும் உரிமை பெற்றதையும், ஓரின சேர்க்கையாளர்களின் உரிமை பற்றியும், வடநாட்டில் வாழும் நேர்மையான ஒரு பெண்ணை பற்றியும், வி. காந்த் எப்படி எல்லாம் 2011 இல் ஆட்சியை பிடிக்கலாம் என்றும், தேர்தலை எப்படி நேரடியாக புறக்கணிக்கலாம் என்றும் பினாத்தும் ஞானிகளுக்கு நாற்பது மைல்களுக்கு அப்பால் கதறும் உயிர்கள் பற்றி எழுத ஈழத்தில் ஒரு ஓ(O)வும் இல்லையே........
தென்னமரிக்காவிலோ, ஆப்பிரிக்காவிலோ, என்றோ நடந்த படுகொலைகளை பற்றி எல்லாம் எழுதியும், அது சம்பந்தபட்ட இசை, மற்றும் இலக்கியம் அறிந்து அழுகும், அறிவுஜீவிகளுக்கு, பக்கத்து தேசத்தின் அழுகுரல் கேட்காது...கேட்டால், வீட்டு அடுப்பில் தீ எரிந்து விடுமாம்....
ஒரு பத்திரிக்கையாளர் ப்ளாகில் எழுதுகிறார்....இதுநாள் வரை ஈழம் என்றால், என்ன ? அது இந்தியாவிற்கே ஆபத்து என்றும் எழுதி, பேசி வந்தவர்...இன்று அம்மா சொன்ன உடன், ஈழம் சரி...போராட்டம் தவறு என்கிறார்......இவரை போன்ற அறிவுசீவிகள் தான் மிக மிக ஆபத்தானவர்கள். ஈழம் சரிங்க சார்...அதற்காக நீங்கள் இதுவரை எழுதிய எழுத்துக்களில் என்ன செய்துள்ளீர்கள்? ஈழ போராளிகளை விடுங்கள்....அங்கிருந்து வந்துள்ள அகதிகள் பற்றியாவது ஒரு கட்டுரை எழுதி இருக்கிறீர்களா? அமைதியாக போரிடுவதற்கு முதலில் எழுத்துக்களில் காட்டி இருக்கலாம் அல்லவா.....ஒரு சிங்கள லசந்த விக்கிரமுதுங்காவிற்கு இருந்த கடமை உணர்ச்சி உங்களுக்கு எங்கு சென்றது?

உண்மையை சொல்லவேண்டுமானால், இலங்கையில் இருக்கும் அளவிற்கு கூட சுதந்திரமோ, பத்திரிக்கை கடமை உணர்வோ தமிழகத்தில் இல்லை. அங்கு ஒரு வெளிநாட்டு மந்திரிகளை தீவிரவாதிகளே வருக என்று போஸ்டர் அடித்து ஓட்ட முடிகிறது....நம் நாட்டில், ஒரு கட்சி தலைவியை விமர்சிக்க முடியவில்லை. திமுக தலைவரை விமர்சித்தால் வராத கோபம், காங்கிரஸ் தலைமையை விமர்சித்தால் வருகிறது.